லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லண்டன் சவுத் எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று மாலையில் இங்கிலாந்து நேரப்படி 4 மணி அளவில் நெதர்லாந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் சில வினாடிகளிலேயே தரையில் திடீரென விழுந்து விபத்துக்கு உள்ளானது.
தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு குழுவினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் புறப்பட்டு சென்ற சில வினாடிகளிலேயே தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக விமான விபத்துக்கள் அடிக்கடி நடந்து வருகின்றது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் குஜராத் அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானிகள், பணியாளர்கள் மற்றும் விமான பயணிகள் உள்ளிட்ட 241 விமான விபத்தில் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் ஆனது புறப்பட்ட சிறிது வினாடிகளிலேயே தரையில் விழுந்து சுக்குநூறாக வெடித்து சிதறியது. சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது ஏன்? என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், விபத்தின் போது விமானத்தில் எத்தனை பயணிகள் இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதா? என்றும், விமானத்தின் நிலை என்ன? என்பது குறித்து எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.