ஆமதாபாத்: தொழிலதிபரை மிரட்டி ரூ.2 கோடி பறித்த வழக்கில் சமூக வலைதள பெண் பிரபலம் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த கீரை கீர்த்தி பட்டேல் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமானவர். சில ஆண்டுகளுக்கு முன்பு டிக் டாக் செயலியின் மூலம் ரசிகர்களை கவர செய்தார். டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டதால் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டு 10 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர்.
காலப்போக்கில் இவரது பண ஆசை எல்லை மீறியது. அதன்படி ஆபாச வீடியோக்களை அனுப்பி அதன் மூலம் பணத்தை பறிக்கும் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் கீர்த்தி பட்டேல். அந்த வரிசையில் தொழிலதிபரை மிரட்டி இரண்டு கோடியை பறித்துள்ளதாக சூரத்தில் உள்ள கபோதரா போலீசில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இவருடன் சேர்ந்து அவரது கூட்டாளிகள் ஆறு பேர் மீது கடந்த ஜூன் மாதம் வழக்கு தொடரப்பட்டது. மிரட்டி பணம் பறித்ததின் பிறகு 10 மாதங்கள் தலைமறைவாக இருந்த கீர்த்தி பட்டேல் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கீர்த்தி படேல் தனது தொலைபேசியை அணைத்து விட்டு தலைமறைவாக இருந்து வந்தது தெரிய வந்தது.
மேலும், சூரத் நீதிமன்றத்தில் கீர்த்தி படேலுக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படியே கைது செய்யப்பட்டது என்றும், மேலும் கீர்த்தி படேலுடன் விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.





