பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த 50 வயது தாயை தனது 20 வயது சக நண்பருக்கு திருமணம் முடித்து வைத்த மகன். மகனின் வகுப்பு தோழனை விரும்பி திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் சேர்ந்து வாழ்வதில் அவர் கர்ப்பமாக உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவை சேர்ந்த சிஸ்டர் ஜின் 50 வயது பெண். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ளார். 30 வயது நிரம்பிய பின் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. கருத்து வேறுபாட்டால் கணவன் மனைவி இருவரும் பிரிந்துள்ளனர். மகனும் தாயும் ஒரு வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
மகன் கைகாய் உடன் ரஷ்யாவை சேர்ந்த டெஃபு என்ற மாணவர் படித்து வந்திருக்கிறார். இருவரும் ஒரே வயது உடையவர்கள். ரஷ்யாவை சேர்ந்தவர் எனினும் சீன மொழியை சரளமாக பேசக் கூடியவர். அவ்வப்போது நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்து வைப்பது வழக்கம். அவர்களுள் டெஃபுவும் ஒருவர்.
ஜின் மற்றும் டெஃபு ஆகிய இருவருக்கும் முதல் பார்வையில் காதல் வயப்பட்டு உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர். மகனின் நண்பன் என்று ஜென் சற்று தயக்கத்தில் இருந்தாலும் ஜின்-டெபு ஆகியோரின் திருமணத்திற்கு மகன் ஆதரவு தெரிவித்ததால் திருமணம் செய்து கொண்டனர். ஜின்-டெஃபு ஆகியோர் திருமணம் செய்து கொண்ட பின் மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். தற்போது ஜின் கர்ப்பமாகியுள்ளார்.
ஜின் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தது, தனக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் 30 வயதில் கணவனை பிரிந்து இருந்த நிலையில் மகனின் வகுப்புத் தோழனுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டது. மகனின் ஆதரவோடு திருமணம் செய்து கொண்டு தற்போது கர்ப்பமாக உள்ளேன் என வெளியிட்டுள்ளார்.
சீன பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த அவர், நான் இன்னும் இளமையாக இருக்கிறேன் அதனால் தான் டெஃபுவை கவர்ந்து உள்ளேன். டெஃபு தனக்கு பரிசுகள் மட்டும் ஆச்சரியங்களை எனக்கு வழங்கி வருகிறார் என்று பெருமையாக பேசியுள்ளார்.