விஜய்க்கு ஓட்டு போடாதீங்க!! திமுக எதிர்ப்பு ஓட்டு எங்களுக்குத் தான்!! கோவையில் எஸ்.பி. வேலுமணி!!

sp-velumani-attacks-vijay-tvk-coimbatore-speech-admk-dmk-opposition-votes-march-31-2026

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோவையில் இன்று (மார்ச் 31, 2026) நடைபெற்ற அதிமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மிகக் காட்டமான உரையை ஆற்றினார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை இலக்காகக் கொண்டு அவர் முன்வைத்த விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. “திமுக மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் விஜய்யின் உண்மையான கொள்கை. அவர் திமுகவின் மறைமுக ஆதரவாளராகச் செயல்படுகிறார். எனவே, திமுகவின் மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்கும் ஓட்டுகள் சிதறாமல் நேராக அதிமுகவிற்கு வர வேண்டும்; அந்த வாக்குகள் விஜய்க்குப் போய் வீணாகக் கூடாது” என அவர் சூளுரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், சமீபத்தில் கரூரில் தவெக நிர்வாகிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டினார். “சொந்தக் கட்சியினரையும், கரூரில் தாக்கப்பட்ட தனது தொண்டர்களையே காப்பாற்ற முடியாத ஒருவரால், தமிழக மக்களை எப்படிப் பாதுகாக்க முடியும்? சினிமாவில் நடிப்பது வேறு, நிஜ அரசியலில் மக்களைக் காப்பது வேறு” என விஜய்யின் அரசியல் முதிர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்கினார்.

அதிமுக மட்டுமே திமுகவிற்கு உண்மையான மாற்று என்றும், விஜய்யின் வருகை திமுகவிற்குச் சாதகமாக அமையாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் தரப்பு குறிவைப்பதாக வரும் தகவல்கள் மத்தியிலேயே வேலுமணியின் இந்த அட்டாக் அமைந்துள்ளது. விஜய்யின் வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு அதிமுகவின் இந்த நேரடித் தாக்குதல், வரும் நாட்களில் தேர்தல் களத்தை இன்னும் அனல் பறக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram