நியூயார்க்: வானிலை மற்றும் ஆக்ஸிஜன் கசிவு போன்றவற்றால் இதுவரை ஆறு முறை ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆக்ஸியம் 4 என்ற திட்டத்தின் படி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் 4 பேர் கொண்ட விண்வெளி வீரர்களுடன் செல்ல தயாராக இருந்தது. ஆக்ஸிமின் மனித விண்கல பயண திட்ட இயக்குனர் க்கி விட்சன் தலைமையில் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. மேலும், திட்ட தலைவராகவும் அவர் செயல்படுகிறார்.
இந்தியாவைச் சேர்ந்த சுபான்ஷு சுக்லா , ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த டிபோர் கபூர் மற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஜ்நான்ஸ்கி ஆகியோர் பயணம் மேற்கொள்ள இருக்கின்றன. முதல் முறையாக விண்வெளி செல்லும் 3 விண்வெளி வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், திட்டமிட்டபடி இயந்திர கோளாறு காரணமாக செயல்படுத்தவில்லை.
ஆக்சிஜன் கசிவு மற்றும் வானிலை காலமாற்றம் போன்றவற்றால் ஆறு முறை விண்வெளி பயணமானது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிட்டு இருந்தது. தொழில்நுட்பக் கோளாறால் பயணம் ஒத்திவைக்கப்பட்டது என நாசா சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்றைய வானிலை 90% விண்கலம் விண்ணில் ஏவ சாதகமாக உள்ளது என தெரிவித்துள்ளது விண்வெளி மையம். சாதகமாக உள்ளதால் விண்வெளி பயணம் தடைப்படாது மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து (இந்திய நேரம்) மதியம் 12.01 மணிக்கு செல்லவிருக்கிறது.
கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்வெளிக்கு செல்ல தயாராக இருக்கிறது என விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.