cricket: இன்று ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இரு அணிகள் மோதிய நிலையில் இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது ஹைதராபாத்.
இந்த வருடம் தொடங்கிய ஐபிஎல் போட்டியில் இரண்டாவது போட்டியாக ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் இரு அணியும் இன்று மோதியது. முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தானி பௌலியை தேர்வு செய்தது இதனால் முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 24 ரன்களில் வெளியேறிய நிலையில் டிராவிட் மற்றும் இசான் கிசான் அதிரடியாக அணிக்கு ரன் சேர்த்தனர். 56 ரண்களில் டிராவிட் ஆட்டமிழந்த நிலையில் நித்திஷ் ரெட்டி களமிறங்கினார். ஆனால் இஷான் கிஷான் மறுமுனையில் அவருடைய அதிரடியை விட்டு வெளியேறாமல் சரமாரியாக சிக்ஸர் பவுண்டர் என விளாசினார்.
இந்நிலையில் இன்று சன்ரைசர்ஸ் அணி அதிகபட்ச ஒரு அணியின் எண்ணிக்கை சாதனை முறியடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 20 ஓவர் முடிவில் 286 ரன்கள் அடித்து இமாலய இலக்கினை ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஒரு அணி அதிக எண்ணிக்கையாக 287 ரன் எடுத்தது அது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சாதனைதான். தற்போது அந்த சாதனையை ஹைதராபாத் அணியே முறியடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 286 ரன்கள் எடுத்து 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என ராஜஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் சதம் விலாசினார். மும்பை அணியில் இருந்து இந்த முறை ஹைதராபாத் அணிக்கு வாங்கப்பட்ட வீரர் இசான் கிஷான் என்பது குறிப்பிடத்தக்கது.