பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில், 2019 ஆம் ஆண்டு முதல் 2025 வரை, குற்றவாளிகள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெற்றன. இது ஒரு பெரும் பாலியல் வன்முறை மற்றும் சத்துணர்வு வழக்காகும், மேலும் பல பெண்கள் மற்றும் சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் விவரம்:
இந்த வழக்கில், 2019 ஆம் ஆண்டில் முதல் 2021 ஆம் ஆண்டு வரை, பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பலரும் பொள்ளாச்சி பகுதியில் வசிப்பவர்கள். அவர்களில் சிலர், அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களாக இருந்தனர்.
2025 ஆம் ஆண்டு மே 13 ஆம் தேதி, கோயம்புத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம், அனைத்து ஒன்பது குற்றவாளிகளையும் ஆயுள் தண்டனை வழங்கியது. மேலும், ஆறு பெண்களுக்கு ரூ. 85 லட்சம் நிவாரண தொகை வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தந்து x பக்கத்தில், பொல்லாத அ.தி.மு.க. நிர்வாகி உள்ளிட்ட குற்றவாளிகளால் நிகழ்த்தப்பட்ட பெருங்கொடுமைக்கு நீதி கிடைத்திருக்கிறது! அ.தி.மு.க. குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்! என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே இன்று கிடைத்துள்ளது. வழக்கம் போல உங்கள் ஸ்டிக்கரைத் தூக்கிக் கொண்டு வராதீர்கள். என்று கூறியுள்ளார்.