கிரிக்கெட்: இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களம் இறங்கி கே எல் ராகுல் அபார சதம் விலாசினார்.
இந்தியாவில் தற்போது ஐபிஎல் போட்டி முடிவடைந்த நிலையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கோப்பை தொடரை பெங்களூர் அணி வென்றது இதனை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. இதற்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் இரு அணிகளும் விளையாடி வருகின்றன.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் முதலில் இங்கிலாந்து லயன்ஸ் டாஸ் வென்று பௌலிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங் களமிறங்கியது இந்திய அணி. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் கே எல் ராகுல் களமிறங்கினர். இதில் ஜெயிஸ்வால் 26 பந்துகள் எதிர்கொண்டு 17 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 11 ரன்களில் ஆட்டம் இழக்க கருண் நாயர் களமிறங்கினார்.
கருண் நாயர் மற்றும் கே எல் ராகுல் இருவரின் ஜோடி சிறப்பாக விளையாடியது. இதில் கே எல் ராகுல் நிதானமாக பொறுப்பாக விளையாடிய 168 பந்துகளை எதிர்கொண்டு 116 ரன்கள் எடுத்து சதம் விலாசினார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். 116 ரன்கள் கே எல் ராகுல் ஆட்டமிழக்க அடுத்தடுத்து களமிறங்கிய ஜூரல் 52 ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி 34 ரன்கள் ஆட்டமிழக்க தற்போது 88 ஓவர்கள் விளையாடி 346 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்திய ஏ அணி. தற்போது ரசிகர்கள் தொடக்க வீரராக போட்டியில் கே எல் ராகுல் தான் களமிறங்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரவலாக கருத்துக்கள் தெரிவித்து வருகின்றன.