கிரிக்கெட்: டெல்லி மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் டெல்லி அணி பந்துவீச்சாளர் ஸ்டார்க் அதிரடி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் லக்னோ இடையிலான போட்டியில் முதலில் டெல்லி அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 209 ரன்கள் குவித்தது. இதில் மிட்செல் மார்ஷ் 72 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் நிக்கோலஸ் பூரன் டெல்லி அணியின் பவுலர்களை திணறு செய்து சிக்ஸர் பவுண்டரி என வெளுத்து வாங்கினார்.
இவர் இப்படியே தொடர்ந்து விளையாடினால் டார்கெட் முன்னுரை தொடும் என ரசிகர்கள் பார்த்த நிலையில், டெல்லியனின் கேப்டன் அச்சர் பட்டேல் பந்தை மிக்செல் ஸ்டார்க் இடம் கொடுத்தார். சொல்லி வைத்தது போல் அவர் வீசிய பந்தில் நிக்கோலஸ் பூரன் அடிக்க முயன்ற போது, பந்து போல்டாகி இரண்டு ஸ்டெப்புகள் பறந்தது. அதிர்ந்து போன நிக்கோலஸ் போறன் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
மேலும் ரவி விஷ்ணு பேட்டிங் செய்யும்போது ஸ்டார்க் வந்து வீசினால் இவரது விக்கெட்டிலும் இரண்டு ஸ்டம்ப்புகள் பறந்தன. அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை தட்டி தூக்கினார் ஸ்டார்க். அஷுதோஷ் சர்மாவின் அசுரத்தனமான ஆட்டத்தினால் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் இறுதி ஓவர் வரை சென்று திரில்லான வெற்றியை அடைந்தது டெல்லி அணி.