6 வது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்!! கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை!!

Strike continues for 6th day
சென்னை: 6 வது நாளாக கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் 2025-2030 ஆம் ஆண்டிற்கான புதிய டெண்டர்களில் 3500 கியாஸ் டேங்கர் லாரிகள் தேவைப்படுகிறது என எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு 2800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீதம் இருக்கும் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் 2016 ஆம் ஆண்டிற்கான பதிவு செய்யப்பட்ட அனைத்து கேஸ் டேங்கர் லாரிகள் வேலை வழங்க கோரி தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் கடந்த ஒன்பதாம் தேதி முதல் 5000 க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இன்று தொடர்ந்து 6வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த ஒன்பதாம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எண்ணெய்  நிறுவனங்கள் மற்றும் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இன்று 6வது நாளாக சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் 5000 க்கும் மேற்பட்ட லாரிகள் இயக்கப்படாமல் உள்ளது.
வேலை நிறுத்த போராட்டத்தால் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளான்டுகளுக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கியாஸ் டேங்கர் லாரிகள் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எண்ணெய் நிறுவனங்கள் மனு தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், லாரிகளை உடனடியாக இயக்க உத்தரவிடவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram