கான்பூர்: உத்திரபிரதேசத்தின் உன்னாவ் நகரில் பள்ளிக்கு செல்லும் மாணவியை வாலிபர் ஒருவர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தகாத வார்த்தைகளிலும் பேசியது தெரியவந்தது. இது பல நாட்களாக நீடித்த நிலையில் தொல்லை தாங்க முடியாது சிறுமி ஒரு கட்டத்தில் தெருவில் வாலிபரின் சட்டை காலரை பிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். காலணிகளை எடுத்து கன்னத்தில் அறைந்தும் சரியான பாடம் புகட்டினார். பொதுமக்கள் வேடிக்கை பார்த்தபடி சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
பின் தொடர்ந்து வந்த வாலிபரை அடிப்பதற்காக பெரிய கல் ஒன்றை கையில் எடுத்து வாலிபரை அடிக்க முயன்றுள்ளார். இந்நிலையில் கங்காகட் கொத்வாலி காவல் நிலையத்தில் போனி சாலையில் சென்று கொண்டிருந்தபோது வாலிபர் மீண்டும் பள்ளி மாணவியை வழிமறித்து தகாத வார்த்தைகளில் பேசியும், தன்னுடன் வரும்படியும் வற்புறுத்தியுள்ளார்.
ஆத்திரமடைந்த மாணவி வாலிபரின் சட்டையைப் பிடித்து தாக்கியுள்ளார். இதுகுறித்து போலீசார் அந்த வாலிபரை பிடித்து சென்று விசாரித்ததில் ஆகாஷ் 20 வயது உடையவர் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்யும் ஈ-ரிக்ஷா ஓட்டுநராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது.
இந்த வீடியோ நேற்று முதல் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வந்த நிலையில் காவல் நிலையத்தின் உயர் அதிகாரி பிரமோத் குமார் மிஸ்ரா, உன்னாவ் பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்ற வாலிபருக்கு எதிராக மாணவி எந்த வித புகார் அளிக்கவில்லை. மேலும், அமைதியை சீரழிக்க முயன்ற பிரிவில் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்த அன்று இரவே வந்த வாலிப விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.