அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை கோவையில் வரவேற்கும் வகையில் அங்கு வெவ்வேறு பகுதிகளில் அதிமுக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமி சேலத்தை அடுத்து கோயம்புத்தூருக்கு செல்ல உள்ளார். இதனால் அங்குள்ள அதிமுக நிர்வாகிகள் சார்பில் கோயமுத்தூர் பகுதியில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதில் டவுன்ஹாலில் வைக்கப்பட்டுள்ள பேனருக்கு மட்டும் பிரச்சினை தற்சமயம் எழுந்துள்ளது.
அங்கே ஏற்கனவே திமுக பேனர் வைக்கப்பட்டு உள்ளது. அதன் முன் அதிமுக பேனர் சமீபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் அதிமுக பேனரை எடுக்க முற்பட்டு உள்ளனர். இதனால் அங்கு பிரச்சனை பூகம்பமாய் வெடித்து இரு பிரிவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முக்தி அடுத்த நிலைக்குச் செல்லாமல் இருக்க சப் இன்ஸ்பெக்டர் அங்கு விரைந்துள்ளார். மேலும் அவர்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளார். அப்போது துணை மாவட்ட செயலாளர் கோட்டை அப்பாஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரை நீ என்ன பெரிய ரவுடியா? தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு! உன் சட்டையை கழட்டி வச்சிடுவேன்! என்று ஆக்ரோசமாக கத்தி கூச்சலிட்டு உள்ளார். இதனால் அங்கு கூடிய கட்சியினர் ஒழிக கோசம் இட்டு கலைந்து சென்றுள்ளனர். எவ்வளவு பெரிய அதிகாரி என்றாலும் பேனர் அகற்ற வேண்டும் என்ற கோபத்தின் காரணமாக இவ்வளவு ஆக்ரோசமாக போலீசாரையே அதுவும் சப் இன்ஸ்பெக்டர்யே மிரட்டி இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இவர் மிரட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக தற்சமயம் பகிரப்பட்டு வருகிறது.