வெற்றிகரமாக விண்வெளி பயணத்திற்கு புறப்பட்டுள்ளார் சுபான்ஸு சுக்லா!! யார் இவர் தெரியுமா!!

சமீபத்தில் பால்கன் நயன் ராக்கெட் மூலம் ஏழு நாட்கள் பயணமாக விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு புறப்பட தயாராக இருந்தவர்தான் இந்த சுபானாஸு சுக்லா. இவர் நம் இந்திய நாட்டைச் சார்ந்தவர். இவர் மட்டுமல்லாது இவருடன் அமெரிக்க நாட்டவர் ஒருவர், ஹங்கேரி நாட்டவர் மற்றும் போலந்து நாட்டவர் ஆகிய நால்வர் இணைந்து இந்த பயணம் போன மாதமே கிளம்ப ரெடியாக இருந்தது. இவர்கள் கிளம்பும் நிலையில், ராக்கெட் இன் பழுது காரணமாக இதுவரை ஆறு முறை முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது. அமெரிக்காவில் உள்ள புளோரிடேவில் அமைந்துள்ள நாசா கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து இந்த சோதனை முயற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்த நால்வர் இணைந்த குழுவுடன் பால்கன் நயன் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணை நோக்கி பாய்ந்துள்ளது. சுபான்ஸு சுக்லா இதற்கு முன்னர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அங்கு பரிசோதனை விமானியாக செயல்பட்டு வந்தவர். இந்நிலையில் இவரது வெற்றி பயணம் கவுண்ட் டவுனுக்குப் பிறகு இவரது தந்தை மற்றும் தாயார் நிகழ்ச்சியில் கண்கலங்கி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அவரும் காலையிலேயே இந்தியர்களை இது ஒரு மைல் கல் பயணம். பயண வெற்றிக்காக அனைவரும் பிரார்த்திப்போம் என்று கேட்டுக் கொண்டு உள்ளார்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram