தமிழக அரசன் விவசாயிகளுக்கு புதிய பம்பு செட்டு மோட்டார்கள் வாங்குவதற்கு 15 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்க முடிவெடுத்த அதற்கான அறிவிப்புகளையும் வெளியிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது பம்பு செட்டுகளுக்கான பைப்புகளுக்கும் தமிழக அரசு மானியம் அறிவித்திருப்பது விவசாயிகளை நிகழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
தமிழ்நாடு வேளாண்மை மற்றும் விவசாய துறையின் சார்பில் தண்ணீர் எங்கு இருக்கிறதோ அதனுடைய மூலத்திலிருந்து தண்ணீரை வயல்வெளிகளுக்கு எடுத்துச் செல்வதற்கான பைப்புகளை விவசாயிகள் வாங்குவதற்கு 50 சதவிகிதம் மானியமாகவோ அல்லது 15,000 மானியமாகவோ வழங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் தேவையான ஆவணங்கள் :-
விவசாயிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் அலுவலகங்களை அணுகி இது குறித்த விண்ணப்பத்தை கேட்டு பெற்று அவற்றை பூர்த்தி செய்து அதனுடன் அடையாள சான்று, நில உரிமை ஆவணம் அல்லது குத்தகை ஒப்பந்தம் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்றவற்றின் நகல்களையும் இணைத்து இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
கோடை காலத்தில் விவசாயிகள் தண்ணீருக்கு அதிக அளவு பைப்புகளை இணைக்க வேண்டி இருக்கும் என்பதற்காகவும் மற்றும் பழைய பைப்புகளை மாற்றி புதிய பைப்புகளை பொருத்துவதற்கு விவசாயிகளுக்கு உதவக்கூடிய திட்டமாக இது அமையும் என்றும் இதன் மூலம் விவசாயிகளுக்கு உதவுவதோடு விவசாயத்தை பெருக்குவதற்கான வழியாகவும் இது அமையும் என தமிழக அரசு சார்பில் எதிர் பார்க்கப்படுகிறது.