Chennai :சென்னையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி நிலையில் , சென்னையில் உள்ள அண்ணா சாலையில் அமைந்துள்ள ஐந்து ஐந்து மாடி கட்டிடம் ஒன்று குலுங்கியதாக, அந்தக் கட்டிடத்தில் மற்றும் அருகில் இருந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடியதால் அங்கு சுற்றி பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக அங்கு சுற்றி அண்ணாசாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் அந்த அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியை செய்து வருகின்றனர். எப்போதும் போல அங்கு வரும் பணியாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்திருக்கின்றனர். அப்போது சுமார் 12 மணியளவில் அந்த ஐந்து மாடி கட்டிடம் ஆனது குலுங்கியதாக கூறப்படுகிறது.
அந்த ஐந்து மாடி கட்டிடம் குலுங்கியது காரணமாக அதில் வேலை செய்த பணியாளர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர். இந்த பணியாளர்கள் வெளியே ஓடி வந்ததன் காரணமாக அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த கட்டிடம் குலுங்கியது தொடர்பாக தேசிய புவியியல் அமைப்பிடம் கேட்கையில், அவர்கள் இது ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது போல் காணப்படவில்லை என கூறியுள்ளது.





