இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை ஒட்டி அரசியல் பேரணி நடத்தப்பட்டது. பேரணியில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்ப தயாராக இருந்தபோது பேரணியில் புகுந்த தற்கொலை படையினர் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் கூடியிருந்த பகுதியில் திடீரென தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் 25 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் மகன் அக்தர் மெங்கல் உயிர் தப்பினார். மேலும், தற்கொலைப்படை தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன படுகாயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு குறித்தும், தற்கொலை படை தாக்குதல் குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வடமேற்கு பாகிஸ்தானில் இதே போன்று துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்டது. துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்டதில் 6 பாதுகாப்பு வீரர்கள் மற்றும் ஆறு பயங்கரவாதிகள் உள்ளிட்ட 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துணை ராணுவ தளத்தின் மீது நடத்தப்பட்டதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.