காதலா இல்லை கருமமா?? கன்னியாகுமரியில் தொடரும் தற்கொலைகள்!!

Suicides continue in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டத்தில் காதல் தொடர்பான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. இதில் காதலால் ஏற்படும் எதிர்பாராத முடிவுகள் இளைஞர்கள் வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கொடூரமாகிறது. சமீபத்திய சம்பவங்கள் அதைச் சுட்டிக் காட்டுகின்றன. குளச்சல் சலேட்நகரை சேர்ந்த ராஜேந்திரனின் மகன் சுபித் (22) பிஎஸ்சி பயோடெக்னாலஜி படித்துவிட்டு, மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். கல்லூரி நாட்களிலேயே தனது தோழியை காதலித்து வந்தார். அந்த பெண்ணும் அவரை அன்புடன் ஏற்றுக் கொண்டு, திருமணம் குறித்து எதிர்பார்ப்பு வைத்திருந்தார்.

அந்த நிலையில், கடந்த வாரம் அந்த பெண்ணுக்கு திடீரென வேறு ஒரு திருமணம் நடந்துவிட்டது என்ற செய்தி சுபிதை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்து, 31ம் தேதி விஷம் குடித்து மயங்கி வீழ்ந்தார். அவரது குடும்பத்தினர் உடனடியாக குளச்சல் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தும், பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு மாற்றி சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இதற்கு முன்பாக ஜிதின் என்ற இளைஞர், காதலித்த பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அவசரமாக வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில், காதலியின் விருப்பமில்லாமலும் அந்தத் திருமணம் நடந்தது. இதனால் மனம் உடைந்த ஜிதின், ரப்பர் மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு அதே பெண்ணும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில், சுபித்தின் தற்கொலை சம்பவம் குறித்து குளச்சல் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரங்களில் ஏற்படும் மன உளைச்சலை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு ஏதேனும் தற்காலிக ஆலோசனை அல்லது மனநல ஆலோசனை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். “இளைஞர்கள் மன அழுத்தத்தில் தற்கொலை செய்வதை தவிர்க்க, பெற்றோர், குடும்பத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மனநல ஆலோசனையை அதிகரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram