என் பிள்ளைகளுக்காக எதையும் செய்வேன்!! ரூ.40 கோடி ஆஃபரை நிராகரித்த நடிகர் சுனில் ஷெட்டி!! போதை மாஃபியாவுக்கு சவுக்கடி!!

suniel-shetty

திரைையுலகில் முன்னணி நடிகர்கள் பலரும் புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரங்களில் நடித்து விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் வேளையில், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி ஒரு மிகச்சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு வந்த ரூ.40 கோடி ஆஃபரைத் தட்டி கழித்த விபரத்தை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார்.

சுனில் ஷெட்டி தனது பேட்டியில் கூறியதாவது: “ஒரு புகையிலை நிறுவனத்திடம் இருந்து விளம்பரத்தில் நடிக்க எனக்கு ரூ.40 கோடி தருவதாக ஆஃபர் வந்தது. ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள், அது எவ்வளவு பெரிய தொகை! எனக்கும் பணம் தேவைதான், இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அந்தப் பணத்தைக் காட்டினால் நான் உடனே மயங்கிவிடுவேன் என அவர்கள் நினைத்தார்களா எனத் தெரியவில்லை.”

சுனில் ஷெட்டி இந்த ஆஃபரை நிராகரிக்க மிக முக்கியமான காரணமாகத் தனது பிள்ளைகளைக் குறிப்பிட்டுள்ளார். “நான் செய்யும் ஒவ்வொரு செயலும் என் மகன் மற்றும் மகளின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

சமுதாயத்தைச் சீரழிக்கும் ஒரு பொருளை நான் விளம்பரப்படுத்தி, அதன் மூலம் வரும் பணத்தில் என் பிள்ளைகளை வளர்க்க விரும்பவில்லை. அந்த விளம்பரத்தில் நடித்தால் என் குழந்தைகளுக்கு நான் தரும் மரியாதை என்ன?” என அவர் ஆவேசமாகக் கேட்டுள்ளார்.

சினிமா உலகிற்கு ஒரு பாடம்: ஏற்கனவே அஜய் தேவ்கன், ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் பான் மசாலா விளம்பரங்களில் நடித்ததற்காக மக்கள் மத்தியில் கடும் கண்டனங்களைச் சந்தித்தனர். அக்ஷய் குமார் பின்னர் மன்னிப்பு கேட்டு அந்த விளம்பரங்களில் இருந்து விலகினார். ஆனால், தொடக்கத்திலேயே இவ்வளவு பெரிய தொகையைத் துச்சமாக மதித்துத் தள்ளிய சுனில் ஷெட்டியின் குணத்தைப் பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram