NASA: சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதாக நாசா தகவலை பகிர்ந்துள்ளது. Sunita வில்லியம்ஸ் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றி வந்து கொண்டிருந்தார். இவர் ஏற்கனவே 2முறை விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று பூமிக்கு திரும்பி உள்ளார். மேலும் இவர் இந்தியா வம்சாவளியில் பிறந்தவர் ஆவார்.மே
லும் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி ஸ்டார் லைனர் என்னும் விண்கலன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் வில் மோரும் விண்வெளி மையத்திற்கு பயணத்தை தொடங்கினர். மேலும் அங்கு அங்கு சென்று எட்டு நாட்கள் அங்கேயே தங்கி ஆராய்ச்சி மேற்கொண்டு விட்டு மீண்டும் பூமிக்கு திரும்புவதாக இருந்தது. ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக அவர்கள் இருவரும் நமக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் அதனை சரி செய்து விட்டு பூமிக்கு திரும்பி வரலாம் என்று பூமியில் உள்ள நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள். ஆனால் அந்த முயற்சியும் தோல்வி பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஒன்பது மாதங்களாக அவர்கள் விண்வெளி மையத்திலேயே தங்கி இருக்கின்றனர். மேலும் அவர்கள் அங்கே தங்கியதற்கு காரணம் சில அரசியல் காரணங்களே என்றுபுதிதாக அமெரிக்காவில் அதிபராகிய டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பேரி வில்மோர் இரண்டு பேரையும் எலன் மாஸ்கின் சொந்த விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் மூலம் மார்ச் 14-ல் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா தகவலை பகிர்ந்துள்ளது. மேலும் அதிபர் டிரம்ப் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தங்கியுள்ள இரண்டு பேரையும் தவறாக விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பாதுகாப்பாக பூமி வந்தடைய வேண்டும் என்று பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருக்கிறர்கள்.