கடந்த வருடம் ஜூன் 5ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பர்ச் வில்மோர் இருவரும் விண்வெளி பயணம் புறப்பட்ட சென்று இருந்தனர். விண்வெளி மையத்தையும் வெற்றிகரமாக அடைந்திருந்தனர். அவர்கள் போயிங் என்பவரின் தயாரிப்பில் உருவான ஸ்டார்லைனர் என்ற விண்கலத்தை பயன்படுத்தி விண்வெளி மையம் சென்றிருந்தனர். ஸ்டார்லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏழு நாட்களில் திரும்ப வேண்டிய பயணமானது, ஒன்பது மாதங்களாகியும் இதுவரை திரும்பவில்லை. அவர்களும் அந்த விண்கலத்தை சரி செய்யும் முனைப்பில், முயற்சி செய்திருந்தனர். ஆனால் அது தோல்வியை கண்டு இருந்தது. அவர்கள் அங்கு விண்வெளி மையத்தில் தங்கி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
தொடர்ந்து அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டு வர நாஸா நிறுவனமும் பல முயற்சிகளை எடுத்து வைத்து தோல்வி கண்டிருந்தது. பலரும் அவர்களை மீண்டும் இங்கு கொண்டுவர வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கென்னடி விண்கல மையத்திலிருந்து டிராகன் விண்கலத்தை ஏவி அவர்களை மீண்டும் அழைத்து வர திட்டம் தீட்டப்பட்டு இருந்தது. இந்த விண்கலத்தின் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளை சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட இருந்தனர். இந்த விண்கலத்தை விண்ணில் ஏவும் சோதனையில் ஹைட்ராலிக் அமைப்புகளில் கோளாறு இருப்பதை கண்டறியப்பட்டதால் இது தற்சமயம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் எப்பொழுது தயாராகி விண்ணில் ஏவப்படும் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இதனால் மீண்டும் சுனிதா மற்றும் பர்ச் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர சிரமம் ஏற்பட்டு வருகிறது.