பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!! ஒன்பது மாதங்கள் விண்வெளி பயணத்தில் சிக்கியுள்ளாரா!!

விண்வெளி ஆராய்ச்சிக்காக நம் இந்திய நாட்டின் வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் மூன்று முறை விண்வெளி பயணம் மேற்கொண்டு உள்ளார். இவரது மூன்றாவது முறையானது, கடந்த ஜூன் 5, 2024 ஆம் ஆண்டு ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் செயல்பட்டு தொடங்கி இருந்தது. அவர்களின் அந்த விண்கலம் விண்வெளி ரீச் ஆன பிறகு பழுதடைந்துள்ளது. இதனை சரி செய்யும் முனைபோடு இவர்கள் பல முயற்சியில் ஈடுபட்டும் அதுவும் தோல்வியுற்றிருந்தது. அவர்கள் அங்கு விண்வெளியில் சிக்கிக் கொண்டிருந்தனர்.

அவ்வப்போது அவர்கள் விண்வெளியில் செயல்படும் போட்டோக்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்திருந்தன. இவர்கள் மீண்டும் பூமிக்கு வருவது குறித்து பல முன்னெடுப்புகள் நாசாவில் எடுக்கப்பட்டு வந்திருந்தன. எனினும், நாசா தோல்வி கண்டிருந்தது. ஒன்பது மாதங்கள் நிறைவடைந்தும், தற்சமயம் வரை இவர்கள் பூமிக்கு திரும்பப்படவில்லை. இவரோடு விண்வெளியில் பேரி வில்மோரும் சென்றுள்ளார். எட்டு நாட்களில் முடிய வேண்டிய பயணம் ஒன்பது மாதங்களாகியும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் தற்சமயம் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் இவர்கள் பூமிக்கு திரும்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகின்ற மார்ச் 16 இந்த வார ஞாயிற்றுக் கிழமை அவர்களை விண்வெளியில் இருந்து பூமிக்கு அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது. பலரும் இவர்கள் உடல்நிலை குறித்தும், விண்வெளியில் இவர்கள் சிரமப் படுவது குறித்தும் கவலையுற்று இருந்திருந்தனர். இந்நிலையில் தற்சமயம் இந்த நாசாவின் அறிவிப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Share it :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram