சினிமா: தளபதி விஜய் நடிக்கும் ஜனநாயகம் படத்தில் தற்போது நடித்த வருகிறார் அந்த திரைப்படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகர் தான் தளபதி விஜய். இவர் தற்போது தமிழக வெற்றிக்கழக கட்சியை தொடங்கி ஓராண்டுகள் முடிவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார். அரசியல் களப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மக்களுக்காக குரல் எழுப்பியும் வரும் நிலையில், தனது கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படத்தின் ஒரு புதிய அப்டேட் ஒன்று இப்போது வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களான அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் என முக்கிய இயக்குனர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அட்லீ விஜய் வைத்து மூன்று திரைப்படங்களும், லோகேஷ் கனகராஜ் இரண்டு திரைப்படங்களும், நெல்சன் ஒரு திரைப்படமும் இயக்கியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஜனநாயகன் திரைப்படத்தினை எச் வினோத் இயக்குகிறார். இந்தத் திரைப்படத்தில் பாபிடியோல் மற்றும் பூஜா ஹெக்டே போன்ற முக்கிய முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.