தமிழ் சினிமா ஹீரோக்களின் அரசியல் ஆசை அடிக்கடி தலைதூக்கும். தற்போது நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்த நிலையில், சூர்யாவும் விரைவில் அரசியல் பயணத்தை தொடக்கலாம் என்ற தகவல்கள் வலுவாகி கொண்டு இருக்கின்றன. இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடிய சூர்யாவை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். அவர்களை வாழ்த்திப் பாராட்ட சூர்யா கட்டடத்தின் மேல் ஏறி நின்று கைகூப்பி நன்றி தெரிவித்தார். அப்போது எதிர்பாரா விதமாக ஒருவர் தூக்கி எறிந்த பூங்கொத்தை கேட்ச் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
- பின்னர் ரசிகர்களுடன் செல்பி எடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சமூக நலத்துக்காக ‘அறம்’ அறக்கட்டளை மூலம் கல்வி உதவிகளை வழங்கி வருகிறார் சூர்யா. இதுவரை 5,000க்கும் அதிகமான மாணவர்கள் அவரது உதவியில் படித்து வேலை பெற்றுள்ளனர். புதிய கல்விக் கொள்கை, நீட் உள்ளிட்ட அரசுக் கொள்கைகளுக்கு எதிராகவும் அவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பேசி வந்துள்ளார். நடிகர் விஜய் போலவே சூர்யாவும் தனது ரசிகர் மன்றத்தை திட்டமிட்டு வலுப்படுத்தி வருகிறார். அவரது சமீபத்திய கருப்பு பட டீசர் கூட அரசியல் டோனில் அமைந்ததாகவே ரசிகர்கள் கருதுகிறார்கள். ஜெய் பீம் படம் வந்தபோது எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தையும் தைரியமாக எதிர்கொண்ட சூர்யா, இனியும் அரசியல் கருத்துகளைத் தன் படங்கள் மற்றும் சமூகச் செயல்பாடுகள் வழியாக வெளிப்படுத்தி வருகிறார். இதனால், விஜய்க்குப் பிறகு சூர்யாவும் அரசியல் கட்சி தொடங்கி நேரடியாக அரசியலில் குதிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது.