சிம்பொனி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற இசைஞானி இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி ஒன்று அளித்துள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய சந்தோசமாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை என்று தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பேட்டியில் கூறியது பின்வருமாறு, ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். வருகின்ற மார்ச் எட்டாம் தேதி உலகின் தலைசிறந்த இசைக் கலைஞர்களோடு, இந்த சிம்பொனியை வெளியிடப் போவதாக கூறியுள்ளார்.
செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு, இது எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது என்று உற்சாகமாக கேட்டுள்ளார். இதில் உங்களுக்கே இவ்வளவு சந்தோசம் என்றால் எனக்கு எந்த அளவு இருக்கும் என்று தனது உணர்ச்சியை வெளிப்படுத்துமாறு கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என்றும், இசை திருவிழாவாக இது அமையும் என்றும் அதில் அவருக்கு துளியும் சந்தேகம் இல்லை என்றும் பதிவிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் இங்கு நல்ல மனதோடு வந்திருக்கிறீர்கள்! உங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.
இசை நிகழ்ச்சி மிக அற்புதமாக அமைய வேண்டும் என்று கடவுளை பிரார்த்தியுங்கள்! இது என்னுடைய பெருமை அல்ல! நம் நாட்டின் பெருமை! Incredible India போல் incredible Ilayaraja என்று அவர் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார். அடுத்தடுத்து செய்தியாளர்கள் குறுக்கிட்டு கேள்வி எழுப்பும் போது, சற்று கோபத்துடன், அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்க கூடாது! நீங்களும் உங்கள் வேலையில் கரெக்டாக இருக்கும்படி நான் என் வேலையில் கரெக்டாக உள்ளேன்! நீங்கள் எல்லாம் சேர்ந்து தான் நான்! உங்களுடைய பெருமையை தான் அங்கு சென்று நிலை நாட்டப் போகிறேன் என்று கூறிச் சென்றுள்ளார்.