தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விக்ரம். கடைசியாக “வீரதீர சூரன் 2” படத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் இன்னும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த கரிகாலனின் பெருமையை மறக்கவில்லை. சமீபத்தில் ஒரு பேட்டியில் விக்ரம் பகிர்ந்த ஒரு அனுபவம், ரசிகர்களிடையே சிரிப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் நடந்த அந்த சம்பவம், விக்ரம் எதிர்பாராதவிதமாக இந்திய கிரிக்கெட் தாதா சச்சின் டெண்டுல்கருடன் சில மணிநேரங்கள் கழித்ததுதான்.
விமானத்திற்கு முன்னதாக விக்ரம் ரசிகர்களால் சூழப்பட்டு, செல்பிகளும் ஆட்டோகிராப்புகளும் நெருக்கமாக வழங்கியிருந்தார். ஆனால், பிளைட் புறப்பட்டதும் அவர் பக்கத்து இருக்கையில் சச்சின் அமர்ந்திருப்பதை கண்டதும் வியப்பில் மூழ்கிவிட்டார். “ஓ மை காட்!” என விக்ரம் கட்டியதற்கு சச்சின் சிரித்துப் பார்த்து, ஒரு மெதுவான “ஹாய்” சொல்லியதாகவும், விக்ரம் அதற்கு கைகொடுத்து பதிலளித்ததாகவும் கூறினார். ஆனால், விஷயம் இங்கேதான் திருப்பமடைகிறது. சச்சின் அருகில் அமர்ந்திருந்தாலும் அவருக்கு நம்மை தெரியாதே இப்பொழுது ஏதாவது ரசிகர்கள் வந்து ஆட்டோகிராப் வாங்க மாட்டார்களா? செல்பி எடுக்க மாட்டார்களா? என ஏங்கியதாக கூறினார். பிறகு எனக்கு தோனி தெரியும். அமிதாப்பச்சன் கூட என்னை பெயர் சொல்லி அழைப்பார். ஆனால் சச்சினிற்கு மட்டும் தெரியாம போச்சே! எனவும் மனதுக்குள் சொன்னாராம்.
விக்ரம் தன் முயற்சியில் பின்னர் “ஹாய் சர்… ஐம் அன்ஆக்டர்” என ஆரம்பித்து உரையாட முயற்சி செய்தபோது, சச்சின் நிதானமாக “ஓ… ஆனால் நான் இந்திய சினிமா பார்க்கவே மாட்டேன்” என பதிலளித்ததாகவும், அதைக் கேட்ட விக்ரம் சற்று நெஞ்சில் அடித்த மாதிரி ஃபீல் ஆனதாகவும், அந்த நினைவுகளை மிக இனிமையாகவும் சிரிப்போடும் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம், விக்ரம் போன்ற பெரும் நட்சத்திரங்கள் கூட, சிலரின் முன் சாதாரண ரசிகராகவே மாறி விடுகிறார்கள் என்பதற்கே ஒரு சான்று!





