நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் திரைப்படங்களில் வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களின் மூலம் பெரும்பாலும் அறியப்பட்டவர். இவரது நடிப்பில் குறிப்பாக சைக்கோ திரில்லர் மூவியான ராட்சசன் மற்றும் பெண் முக்கியத்துவம் குறித்த மூவியான கட்டா குஸ்தி ஆகியவை பெரும்பாலும் ரசிகர்களை கவரச் செய்தது. அதிலும் குறிப்பாக இதன் அடுத்த வெர்ஷன் 2 வை மக்கள் பெரும்பாலும் எதிர்பார்த்து இருந்தனர்.
அப்படி இருக்க சமீபத்தில் இது குறித்த அப்டேட்டை நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார். இவரை எப்போது எந்த பிரமோஷன் நிகழ்ச்சி சென்று இருந்தாலும் அங்கு கேட்கப்படும் முக்கிய கேள்வியில் ஒன்று ராட்சசன் 2 திரைப்படம் அப்டேட் குறித்து தான். சமீபத்தில் அவர் தம்பி நடித்திருந்த பட வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ராட்சசன் 2 திரைப்பட பணிகள் அடுத்த வருடம் தொடங்க உள்ளதாகவும், அடுத்ததாக கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியாக போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ராட்சசன் பட இயக்குனர் ராம்குமாரின் இயக்கத்தில் மற்றொரு படம் தற்சமயம் நடித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அடுத்தடுத்த இவரது அப்டேட்டை கேட்டு மிக உற்சாகத்தில் உள்ளனர். இவருடைய படங்களில் முற்றிலும் மாறுபட்டது தான் ராட்சசன். இது தமிழ் திரையுலக கோணத்தையே மாற்றி அமைத்து இருந்தது. அதன் இரண்டாம் பாகம் அப்டேட் தற்சமயம் வெளியான நிலையில் தமிழ் திரையுலக ரசிகர்களுக்கே இது பெரும் விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.