தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நிலத்தரையில் வசித்து வரும் ஏழை மற்றும் பிற சமூகங்களை மனையுடன் கூடிய உறுதியான வாழ்விடம் பெறச் செய்யும் நோக்கில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு, “நீண்ட வருடங்களாக எந்த ஆட்சேபனையுமின்றி அரசு புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் மக்களுக்கு உரிமை அளிக்கவேண்டும்” என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டங்கள் மற்றும் நகர பகுதிகளில் சிறப்பு ஆய்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பட்டா பெறுவதற்கான முக்கிய தகுதிகள்: குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் அந்த இடத்தில் வசித்து இருக்க வேண்டும்.
வசிப்பிடம் அரசு புறம்போக்கு அல்லது நத்தம் நிலமாக இருக்க வேண்டும்.
குறித்த இடத்தில் யாராலும் ஆட்சேபனை இல்லாமல் இருக்க வேண்டும்.
நீர் நிலைகள், கால்வாய், கோயில் நிலங்கள் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் தகுதியற்றவர்களாக கருதப்படுவர். அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கப்படும்.
குடும்பத்தின் ஆண்டு வருமான வரம்பு ரூ. 5 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆதாரமாக, வசிப்புக் காலம் குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நிலவரத்தை உறுதி செய்த பிறகு மட்டுமே பட்டா வழங்கப்படும்.
கிடைக்கக்கூடிய நில அளவு:
கிராமப்புறங்களில்: 2 – 2.5 சென்ட் வரை.
நகர்ப்புறங்களில்: 1.25 – 1.5 சென்ட் வரை.
பட்டா பெற்ற நிலத்தை விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது என்பது முக்கிய விதியாகும்.
எங்கு விண்ணப்பிக்கலாம்?
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வாயிலாகவும் சில மாவட்டங்களில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தற்போது 29,000க்கும் மேற்பட்ட பயனாளிகள் பட்டா வழங்கும் பணியில் அடையாளம் காணப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ், அரசாங்கம் நடத்தும் சிறப்பு முகாம்கள் வாயிலாக நேரில் விண்ணப்பிக்கவும் வசதி செய்து வருகிறது.





