தமிழகத்தில் நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்க உள்ளது. இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள குறிப்பானது, தமிழகம் தொடர்ந்து முன்னேறி வருகின்றது. தமிழ்நாட்டுற்கான பொருளாதார ஆய்வு அறிக்கை ஆனது முதல் முறையாக வெளியிடப்பட தமிழக அரசால் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நடந்து கொண்டிருக்கும் நிதி ஆண்டில் தமிழக வளர்ச்சி ஆனது 8% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. முக்கியமாக ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு நல்காதது காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு, செயல்படுத்தப்பட உள்ளது.
மத்திய அமைச்சகம் தமிழகத்திற்கு நிதி தர தொடர்ந்து மறுத்து வருவதால், பட்ஜெட் கூட்டத்தொடரிலும் பெரிதாக தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததால் தமிழகத்திற்கு தனியே நிதி அறிக்கை நாளை வெளியாக உள்ளது. ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை திணிப்பால் தமிழக அரசு எதிர்த்து வந்து இருந்தது. அதனைத் தொடர்ந்து பல நெருக்கடிகள் ஒன்றிய அரசினால் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு நாளை தமிழகத்துக்கான பட்ஜெட் அறிக்கையை ரூ (ரூபாய்) நிதிநிலை அறிக்கை என்று குறிப்பிட்டு, சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு குறித்து இவ்வாறு தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாளை இந்த கூட்டத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இது பெரிதும் தமிழ்நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.