பொதுவாக பழங்கள் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது நம் அனைவரின் பழக்கமாக மாறி இருக்கிறது. உண்மையில் பழங்களை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது என்பது சற்று சர்ச்சையான விஷயம் தான். காரணம் சில நேரங்களில் இது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது ஆனால் சில நேரங்களில் அது அரிதான சில தொந்தரவுகளை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பழம் சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது ஏற்படுத்தும் பிரச்சினைகள் :-
✓ பழங்களில் நார்ச்சத்து மற்றும் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் அதை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது ஜீரண செயல்முறையை பாதிக்கக் கூடியது.
✓ ஒரு சிலருக்கு பழங்களை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை உருவாக்குவதோடு வயிறு வலியையும் ஏற்படுத்துகிறது.
✓ பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் அந்த சர்க்கரை ஜீரணமாவதற்கு தண்ணீர் பாதிப்பை ஏற்படுத்துவதால் சர்க்கரை ஜீரணம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனை சரி செய்ய, பழங்கள் சாப்பிட்ட பிறகு குறைந்த அளவு 20 முதல் 30 நிமிடங்கள் வரை தண்ணீர் குடிக்கக்கூடாது. ஒருவேளை நாக்கு வறண்டது போன்ற உணர்வு ஏற்பட்டால் சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம் ஆனால் அதற்கு மாறாக அதிக அளவு தண்ணீர் குடிப்பது பிரச்சினையை ஏற்படுத்தும்.