இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சியில் தனியார் விடுதி ஒன்றில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் அவரவர் வேலைகளுக்காக எதார்த்தமாக தங்கி உள்ளனர். திருமாவளவன் சேலத்தில் உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் அங்கு ஓய்வு எடுப்பதற்காக தங்கி உள்ளார். அப்போது அதிமுக அமைச்சர் வைகை செல்வன் உடன் 20 நிமிடம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார். அதில் அவர்கள் தமிழக அரசியல் குறித்து பேசியதாகவும், அதிமுக கூட்டணிக்கு திருமாவளவனை வைகை செல்வன் அழைத்ததாகவும் கூறப்பட்டிருந்தது. பாஜக இணைந்த கூட்டணியில் விசிக ஒரு போதும் இணையாது என்று அவர் தெரிவித்து இருந்தார்.
அதன் பின் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசிய போது அது நாங்கள் அரசியல் ரீதியாக எந்த ஒரு பேச்சும் பேசவில்லை. நாங்கள் கேஷுவலாக மீட் செய்து பேசினோம் என்று தெரிவித்து இருந்தார். தற்சமயம் இவர்கள் மீட்டிங் குறித்து திமுக டி கே எஸ் இளங்கோவன் பரபரப்பான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். பாஜகவிற்கு திமுக கூட்டணி குறித்து பயம் வந்துவிட்டது. அதனால் தான் சதி செய்ய திட்டமிடுகிறார்கள். திமுக கூட்டணியில் எந்த ஒரு பிரிவினையும் நடக்காது. வரும் தேர்தல் களம் திமுக கூட்டணியில் விசிக திருமாவளவனின் பங்கும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஒருபுறம் விசிக திருமாவளவன் கேட்ட தொகுதிகளை திமுக தர மறுத்து உள்ளது என்று ஒரு தொகுப்பு தெரிவிக்கின்றது.





