லக்னோ : உத்திரபிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டம் கோஹ் கிராமத்தில் வசித்து வந்தவர் சஞ்சு. இவரது மனைவி பெயர் ரேகா இவர்களுக்கு வயது 30 ஆகும். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன ஒரு குழந்தைக்கு 5 இன்னொரு குழந்தைக்கு 4 வயது இருக்கும். இந்த நிலையில் சஞ்சீவின் சகோதரருடைய உறவினரான உமேஷ் என்பவர் இவருக்கு வயது 28 ஆகும். மேலும் சஞ்சீவின் மனைவிக்கும் உமேஷ்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. கள்ளக்காதலில் மோகம் முற்றியதால் கணவர் சஞ்சீவை விட்டு உமேஷ் உடன் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார். பின்பு சஞ்சு காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இந்த புகாரை வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக அவர்கள் இருவரும் தேடி வந்துள்ளனர்
. அவர்கள் இரண்டு பேரும் இமாச்சலப் பிரதேசம் கிண்ணனூர் பகுதியில் வசித்து வந்தனர். இதன் பின்பு அங்கு தங்கியிருந்த ரேகாவை கடந்த மாதம் 4தேதி மீட்டு அவருடைய பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் நடந்ததை மறந்து சஞ்சீவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில், ரேகா தனது குடும்பதுடன் வசித்து வந்த கிராமத்திற்கு உமேஷ் மாறுவேடத்தில் நேற்று வந்துள்ளார். அதுவும் பெண் வேடம் அணிந்து ரேகாவின் வீட்டிற்குள்ளே நுழைந்துள்ளார். வீட்டில் ரேகா மட்டும் தனியாக இருந்ததை உறுதி செய்து வீட்டுக்குள் சென்றுள்ளர் .
மேலும் ரேகாவை தன்னுடன் வந்துவிடும்படி கூறியுள்ளார் ஆனால் ரேகா நான் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மிகவும் ஆத்திரமடைந்த உமேஷ் தான் கொண்டு வந்த பெட்ரோலை ரேகா மீது ஊற்றி தீபத்த வைத்துள்ளார். ரேகா மீது தீ வைத்ததும் ரேகா உமேஷ் மீதும் தீப்பற்றியது. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் ரேக்காவுக்கு அதிகமான தீக்காயங்கள் இருந்துள்ளது . ரேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த சம்பவம்குறித்து காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றன.