தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள்!! 30 ஆண்டுகளுக்குப் பின் அபூபக்கர் சித்திக், முகமது அலி கைது!! 

Terrorists who were hiding

சென்னை: கடந்த 2013 ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய பக்ருதீன் சென்னையில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து கூட்டாளிகளான பண்ணா இஸ்மாயில் பிலால் மாலிக் ஆகியோர் ஆந்திர மாநிலத்தில் உள்ள புத்தூரில் இரு மாநில காவல் துறையினர்கள்  மேற்கொண்டிருந்த சீக்ரெட் மிஷினில் பிடிபட்டனர்.
மேலும், கூட்டாளிகளான அபூபக்கர் சித்திக்கை காவல்தறையினர் தேடி வந்த நிலையில் அபூபக்கர் சித்திக் மற்றும் திருநெல்வேலி முகமது அலி ஆகியோர் காவல் துறையிடம் சிக்கி உள்ளனர். 2012 இல் வேலூர் மருத்துவர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கு மற்றும் பெங்களூரு பாஜக அலுவலகம் அருகில் குண்டு வெடித்த சம்பவம் போன்ற வழக்குகளில் முக்கிய பங்காற்றிய அபுபக்கர் சித்திக் 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தலைமறைவாக இருந்து பயங்கரவாதிகளை தமிழக காவல்துறையினர் தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்துள்ளனர். 1999- ல் தமிழகம் மற்றும் கேரளா போன்ற ஏழு இடங்களில் குண்டு வைத்த வழக்கில் 26 ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்துள்ளார் திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த முகமது அலி.
தற்போது தமிழக போலீசாரிடம் பிடிபட்டுள்ளார். மேலும், இருவரும் தீவிரவாத தடுப்பு படையினரால் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட உள்ளதை தமிழக காவல்துறை சமீபத்தில் தெரிவித்துள்ளது.
Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram