தளபதி தரிசனம் ஆரம்பம்!! இன்று மாலை வெளியாகிறது ‘ஜனநாயகன்’ டிரெய்லர்.. ரசிகர்கள் மரண வெயிட்டிங்!!

இன்று மாலை ‘ஜனநாயகன்’ ஆட்டம் ஆரம்பம்: டிரெய்லர் ரிலீஸ் நேரத்தை குறித்த படக்குழு
சென்னை:
தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகிறது. எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலில் உள்ளது.
மாலை 6.45 மணிக்கு அதிரடி:
படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில், இன்று மாலை 6.45 மணிக்கு டிரெய்லர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் #JanaNayaganTrailer என்ற ஹேஷ்டேக் இப்போதே ட்ரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஜனவரி 9-ல் உலகளாவிய ரிலீஸ்:
‘ஜனநாயகன்’ திரைப்படம் வரும் ஜனவரி 9-ம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாகத் திரைக்கு வரவுள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்துள்ள நிலையில், டிரெய்லரில் விஜய் பேசப்போகும் அரசியல் வசனங்களைக் கேட்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அரசியல் களத்தில் ஜனநாயகன்:
விஜய் முழுநேர அரசியலில் இறங்கிய பிறகு வெளியாகும் படம் என்பதால், இதில் பல அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேவிஎன் புரோடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram