ஜனநாயகன் திருவிழா!! மலேசியாவில் மிரட்டும் விஜய் ரசிகர்கள்!! 80,000 பேர் பங்கேற்கும் வரலாற்று நிகழ்வு!!

Janayagan Audio Launch Malaysia Bukit Jalil

தளபதி விஜய் தனது அரசியல் வருகையை அறிவித்த பிறகு நடிக்கும் கடைசித் திரைப்படம் என்பதால், ‘ஜனநாயகன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணைத் தொட்டுள்ளது. ஹெச். வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, முன்னெப்போதும் இல்லாத வகையில் மலேசியாவில் ஒரு மெகா “கான்செர்ட்” போல நடத்தப்படுகிறது.

மைதானத்தைச் சூழ்ந்த ரசிகர்கள்: இன்று பிற்பகல் முதலே மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புக்கிட் ஜலீல் மைதானத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். சுமார் 80,000 பேர் அமரக்கூடிய இந்த மைதானம், மஞ்சள் மற்றும் கறுப்பு நிற தவெக (TVK) கொடிகளாலும், விஜய்யின் கட்-அவுட்களாலும் விழாக்கோலம் பூண்டுள்ளது.

தளபதி கச்சேரி – மெகா பிளான்: இந்த விழா வெறும் ஆடியோ வெளியீடாக மட்டும் இல்லாமல், ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் ஒரு இசைத் திருவிழாவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிருத் மற்றும் அவரது குழுவினர் மேடையில் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். இதில் படத்தின் முதல் பாடலான “Thalapathy Kacheri” பாடலுக்கு அனிருத்துடன் சேர்ந்து விஜய் மேடையில் நடனமாடுவார் என எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய்யின் அரசியல் பேச்சு? தமிழக அரசியலில் விஜய் அடியெடுத்து வைத்துள்ள சூழலில், இந்த மேடையில் அவர் பேசப்போகும் “குட்டி ஸ்டோரி” மற்றும் அரசியல் கருத்துக்களைக் கேட்க ஒட்டுமொத்த தமிழகமே மலேசியாவை நோக்கித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மலேசிய அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்: சுமார் 80,000 பேர் கூடுவதால் மலேசியக் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மைதானத்தைச் சுற்றியுள்ள போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாலையில் விழா தொடங்கும் போது விஜய் ஹெலிகாப்டர் மூலம் மைதானத்திற்கு வருவார் என்ற ஒரு தகவலும் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram