tvk: இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் பூஞ்சேரியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது அதில் பேசிய தலைவர் விஜய், என்னுடைய தோழர்கள்களுக்கு வணக்கம் என பேச தொடங்கி அவர் பேசியதாவது, இந்த அரசியல் நாளே வேற லெவல் தான் இல்ல ஏன்னா இந்த அரசியல் மட்டும் தான் வித்தியாசமான ஒன்று. யாரு யாரு எப்ப எதிர்ப்பாங்கன்னே நமக்கு தெரியாது யாரு யாரு எப்ப ஆதரிப்பாங்கன்னே நமக்கு தெரியாது. அதை கணிக்கவே முடியாது. இந்த அரசியலில் கேள்விப்பட்டிருப்போம் நிரந்தர நண்பனும் நிரந்தர எதிரியும் இல்லை என்று.
அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம் அது வந்து ஒரு ஜனநாயக உரிமை ன்னு சொல்லுவாங்க ஆனா மக்களுக்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போன ஒருத்தன் அரசியலுக்கு வராண்ணா அதை கண்டிப்பாக நல்லவங்க எல்லாம் வரவேற்பார்கள். ஆனால் ஒரு சில இந்த அதிகாரத்தில் இருக்கும் ஒரு சிலருக்கு மட்டும் கொஞ்சம் எரிச்சல் வரத்தான் செய்யும். அது இருக்கும் தானே என்னடா இவன் திடீர்னு ஒருத்தன் என்ட்ரி கொடுத்துட்டான் இதுவரைக்கும் நாம சொன்னா பொய் எல்லாம் நம்பிகிட்டு மக்கள் நமக்கு ஓட்டு போட்டுட்டு இருக்காங்க.
ஆனா இப்ப வந்து இவன் சொல்றதெல்லாம் பார்த்தா மக்கள் மனசுக்கு ரொம்ப நெருக்கமா வேற இருக்குது. அதுவே நமக்கு ஒரு பெரிய நெருக்கடியாவும் இருக்குது இவனை என்ன பண்ணலாம் என்ன செய்யலாம் எப்படி இவனை குளோஸ் பண்ணலாம். கத்தரதா தா கதர்றதா. என்ன பண்றதுன்னு தெரியாம வர்றவன் போறவன் எல்லாம் கட்சி ஆரம்பிக்கிறான் என்று சொல்லி இப்படி ஏதாவது பேச ஆரம்பிப்பாங்க. இப்ப நம்ம ஆட்சியில் இருக்கிறவங்க நமக்கு எதிரா பேசுறாங்க இல்லையா அந்த மாதிரி இப்படிப்பட்ட ஒரு அரசியல் களத்தில் காலத்துல கொஞ்சம் கூட ஒரு பயம் இல்லாம ஒரு பதட்டம் இல்லாமல் வர்ற எதிர்ப்புகள் எல்லாத்தையும் சும்மா லெப்ட் ல டீல் பண்ணிக்கிட்டு ஏதோ நம்மளுடைய தமிழக வெற்றிக்கழகம் முதலாவது ஆண்டு கடந்து இப்போது இரண்டாவது ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறோம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் திமுக வை நேரடியாக சாடி பேசியுள்ளார்.