Cinema: தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர் 2026 இல் முதல்வர் விஜய் என இருக்கும் ஒரு விளம்பர போஸ்டரை திரைப்படத்தில் வரும் காட்சியாக அமைத்துள்ளார். இது தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் நடிகர் என்றால் அது விஜய் தான். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். மேலும் அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி முழு அரசியலில் தீவிர ஈடுபாடுடன் செயல்பட்டு வருகின்றார். மேலும் அவர் தான் தற்போது நடித்துவரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தோடு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது விரைவில் ஜனநாயகன் திரைப்பட சூட்டிங் முடித்துவிட்டு அனைத்து மாவட்டங்களிலும் அதாவது அனைத்து தொகுதிகளிலும் சென்று மக்களை நேரடியாக சந்திக்க உள்ளதாக கூறி வரும் நிலையில், அறிமுக இயக்குனர் இயக்கிய புதிய திரைப்படத்தில் செய்த சம்பவம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
அறிமுக நடிகர் தினேஷ் அப்புகுட்டி மற்றும் தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள யாதும் அறியான் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில் அந்த ட்ரெய்லரில் தாவேக தலைவர் விஜய் 2026 இல் முதல்வராகி விட்டது போல ஒரு பேப்பர் விளம்பர போஸ்டர் இடம்பெற்றுள்ள காட்சி ஒன்று வெளியானது. தற்போது அந்த போஸ்டர் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது இளைஞர்கள் பெண்கள் விவசாயிகளுக்கு புதுத் திட்டங்கள் முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.