திருபுவனம்: திருபுவனம் காவலர்கள் தாக்கப்பட்டதில் காவலாளி உயிரிழந்த சம்பவம் தற்போது தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தாவிக்க தலைவர் மூன்றாம் தேதியான இன்று போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அடுத்த மாடப்பெரும் காளியம்மன் கோவிலுக்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி மதுரை சேர்ந்த பெண் மருத்துவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தரிசனம் செய்வதற்காக வந்துள்ளனர். காரில் வந்தவர்கள் அஜித் குமாரிடம் சாவியை ஒப்படைக்க, பார்க்கிங் செய்யுமாறு சொல்லி விட்டு கோவிலுக்குள் சென்றவர்.
அஜித் குமாருக்கு கார் ஓட்ட தெரியாததால் வேறு ஒருவரிடம் சாவியை கொடுத்து பார்க்கிங் செய்துள்ளார். நீண்ட நேரம் கழித்து சாவியை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார். தரிசனம் முடிந்து காரில் சென்று பார்த்த போது பத்து சவரன் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் காவலாளி அஜித் குமார் மற்றும் அவரது தம்பியை அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்து விட்டார். குடும்ப உறுப்பினர்கள் அவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு அளித்த அறிக்கையில் 44 இடங்களில் காயங்கள் மற்றும் ரத்தக் கசிவுகள் இருப்பதாக கூறப்பட்டது. மேலும் கை, கால், முதுகெலும்பு,முட்டி, இடுப்பு பகுதி போன்ற பகுதிகளில் சிறாய்வுகள் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த சமயத்தில் அஜித் குமாரை தாக்கிய வீடியோ வெளியானது. குற்றம் சாட்டப்பட்ட ஐந்து தனிப்படை காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். பின் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தனிப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்ற மதுரை கிளை விசாரணையின் போது காவல்துறையினருக்கு அழுத்தம் கொடுத்தவர் யார்? விசாரணையில் அடிப்பதற்கு அதிகாரம் கொடுத்தது யார்? போன்ற சரமாரி கேள்விகளை எழுப்பியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். உயிரிழந்த காவலாளியின் தம்பிக்கு அரசு பணி வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் விஜய் 3ம் தேதியான இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த ஆர்ப்பாட்டம் ஆனது சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடைபெற சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மனு அளிக்கப்பட்டது. தேதி மாற்றம் குறித்து கூறப்பட்டதை தொடர்ந்து ஜூலை ஆறாம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அஜித் குமாரின் குடும்பத்தினரை சந்திக்க இன்று சிவகங்கை சென்றுள்ளார் தவெக தலைவர் விஜய்.