29 வயதில் ஓய்வை அறிவித்த அதிரடி வீரர்!! கிரிக்கெட் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. இனி IPL மட்டும்தான்!! 

The action star suddenly announced his retirement.

cricket: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய அதிரடி ஜாமபாவன் வீரர் நிகோலஸ் பூரன் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை எற்படுதியுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய அதிரடி வீரர்களில் ஒருவர் நிக்கோலஸ் பூரன் இவர் இடது கை பேட்ஸ்மேன். அது மட்டுமல்லாமல் இவர் விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர். இவர் இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடியதில்லை. மேலும் ஒரு நாள் போட்டி தொடர்களில் 61 போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் அடித்துள்ளார். மேலும் இவர் ஒரு முழு டி20 பேட்ஸ்மேன் என்றே கூறலாம்.

இவர் அதிகமாக அதிரடியாக விளையாட கூடிய பேட்ஸ்மேன் அதனால் இவர் அதிக டி20 போட்டிகளில் தான் விளையாடியுள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 106 போட்டிகளில் விளையாடி 2275 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவர் அதிகபட்சமாக 98 ரன்கள் அடித்துள்ளார். ipl போட்டிகளில் இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 2293 ரன்கள் அடித்துள்ளார். இந்த ஆண்டு ipl தொடரில் அதிரடியாக விளையாடி வந்தார் பூரன்.

இவர் ipl போட்டிகளில் 167 சிக்சர்கள் அடித்துள்ளார். அனால் யாரும் எதிர்பாரத வகையில் அவர் இன்று திடீரென அணைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் விலகி கொள்வதாக ஓய்வை அறிவித்து ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார் பூரன். மேலும் இதற்குமேல் ipl மற்றும் cpl போன்ற லீக் போட்டிகளில் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். இவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்ள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram