கிரிக்கெட்: இந்திய அணி பாகிஸ்தான் துபாயில் போட்டியை விளையாடுவது குறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளர் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து அணியுடன் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இன்று விளையாட உள்ளது இந்த போட்டி இன்று இரண்டு முப்பது மணி அளவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் மீது எழுந்து வரும் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர்.
சில முக்கிய காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான போட்டிகளில் பாகிஸ்தானில் விளையாடாது என பிசிசிஐ தெரிவித்திருந்தது இந்நிலையில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை மட்டும் துபாயில் நடத்த திட்டமிட்டு போட்டி நடத்தப்பட்டது. மேலும் இந்திய அணி லீக் தொடர்களில் எந்த போட்டியிலும் தோல்வி அடையாமல் அனைத்து போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது.
இதனால் பல அணிகளும் பல மற்ற நாட்டு வீரர்களும் ரசிகர்களும் இந்திய அணியின் மீது தொடர் விமர்சனங்களை முன்வைத்தனர், அதாவது இந்திய அணி வேறு எந்த மைதானத்திற்கும் வேற எந்த நாட்டிற்கும் செல்லாமல் ஒரே மைதானத்தில் விளையாடி ஒரே மைதானத்தில் பயிற்சி செய்து அங்கே விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமானது அதனால் தான் எளிதாக வெற்றி பெறுகிறது. என்று பல விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் இதுகுறித்து பதில் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் நீங்கள் சரியாக விளையாடவில்லை என்பதற்காக இந்தியாவின் மீது குற்றம் சுமத்துவது சரியானது அல்ல. அது மட்டுமல்லாமல் துபாயிலேயே பயிற்சி செய்து போட்டிகளை இங்கேயே விளையாடுவதில் இந்திய அணிக்கு என்ன சாதகம் உள்ளது எனக்கு புரியவில்லை என்று சிதான் சூ கோட்டக் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பதிலளித்துள்ளார்.