இஸ்ரேல் பேரணியில் நடந்த கொடூரம்!! எரித்து கொல்லும் முயற்சியில் சப்ரி சோலைமான்!!

The atrocities at the Israel rally!!
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட பேரணியில் பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் உயிருடன் எரித்து கொல்ல முயன்றுள்ளார் ஒருவர். இஸ்ரேலுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை அமெரிக்கா எப்போதும் வழங்கிக் கொண்டிருக்கும். இஸ்ரேல்-ஹமாஸ் மோதலிலும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு தேவையான உதவிகளை செய்து பக்க பலமாக இருந்தது. கொலராடோவில் ஆதரவாளர்கள் சிலர் இஸ்ரேலுக்கு குரல் கொடுக்கும் வகையில் பேரணியை நடத்த முயற்சித்துள்ளனர்.
கொலரடோவில் குடியிருந்த மக்கள் மீது திரவங்களை வீசி தீப்பற்ற வைக்க முயன்றுள்ளார் ஒருவர். மேலும், “பாலஸ்தீனத்தை விடுவிப்போம்” என்ற வாக்கியத்தையும் கோஷமிட்டுள்ளார். இந்த சம்பவமானது போல்டர் என்ற பகுதியில் நடந்துள்ளது. யூதர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டுள்ளனர். ஹமாஸ் பிடித்து வைத்துள்ள கைதிகளை நினைவு கூறும் வகையில் இந்த பேரணியானது நடந்துள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர் முகமது சப்ரி சோலைமான் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
பின் அவரை கைது செய்தனர். இந்த தாக்குதலின் போது 67 முதல் 88 வயதில் இருந்த ஆறு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் நிலை கவலைக்கிடம் என தெரிய வந்துள்ளது. பேரணியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷமிட்டுள்ள வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதலின் போது சட்டை அணியாமல் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோஷமிட்டு இருந்தார். போராட்டக்காரர்களை நோக்கி அவர் ” நீங்கள் எத்தனை குழந்தைகளை கொன்றீர்கள்?” என்று கேட்டிருக்கிறார் சப்ரி சோலைமான்.
கொடூரம் நடந்தேறிய சமயத்தில் “நீங்கள் இவ்வாறு எல்லாம் செய்யக்கூடாது” என்று ஒருவர் எதிர்த்து கேட்டதற்கு “நான் அப்படித்தான் செய்வேன்” என்று பதில் அளித்து தாக்குதலை தொடர்ந்தார். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை அக்கம் பக்கத்தினர் சென்று உதவினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டது குறித்து விசாரணை எஃப்.பி.ஐ க்கு மாற்றப்பட்டுள்ளது.
Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram