Cricket: நேற்று ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியான பெங்களூர் மற்றும் லக்னோ இரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்ற நிலையில் இதுவரை எந்த அணியும் செய்யாத சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரின் கடைசி லீக் போட்டி லக்னோ மற்றும் பெங்களூர் இரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் 227 ரன்கள் குறித்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ரிஷப் பந்த் 118 ரன்கள் விலாசினார். மேலும் மார்ஷ் 67 ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து களமிறங்கிய பெங்களூர் அணி 19-வது ஓவரில் 230 ரன்களை எட்டி அபார வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே யாரும், எந்த அணியும் செய்யாத ஒரு சாதனையை செய்துள்ளது பெங்களூர் அணி. இந்த வெற்றியின் மூலம் ஒரு அணி ஒரு தொடரில் அனைத்து AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது பெங்களூர் அணி. இதுவரை மொத்தம் விளையாடிய 14 போட்டிகளில் 7 AWAY போட்டிகளிலும் வெற்றி பெற்று மொத்தம் ஒன்பது வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது பெங்களூர் அணி.
இந்நிலையில் அடுத்து பஞ்சாப் அணியுடன் பெங்களூர் அணி மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்படும் தோல்வி அடையும் அணி இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறும்.