இவர் இதை கடைபிடிக்கவில்லை!! ஷமியின் மீது எழுந்த பெரிய சர்ச்சை!! சையத் கிர்மானி சொன்னது என்ன??

The big controversy surrounding Shami

கிரிக்கெட்: இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி மீது தற்போது சர்ச்சை மற்றும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் விளையாட உள்ளது. இரு அணிகளும் இதற்கான தீவிர பயிற்சி செய்து வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் வேகப்  பந்துவீச்சாளர் முகமது சமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முகமது சாமி ரமலான் நோன்பை கடைபிடிக்கவில்லை என பலரும் அவர் மீது குற்றம் சுமத்தி வந்த நிலையில் தற்போது  பெரிய கடுமையான விமர்சனமாக எழுந்துள்ளது ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் பகல் நேர உணவை இஸ்லாமியர்கள் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது தான் நோன்பு இருக்க வேண்டும் என்பது இஸ்லாமிய முறை. ஆனால் முகமது சாமி இதை கடை பிடிக்கவில்லை என்று அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சையது கிர்மானி அறிவுரை வழங்கி இருக்கிறார் அதில் அவர் கூறுகையில் நாட்டுக்காக விளையாடுகிறீர்கள் நீங்கள். இந்த மாதம் ரமலான் மாதம் தான் அதில் எந்த சந்தேகமும் இல்லை நாம் நமது நாட்டுக்காக தான் இந்த வாழ்க்கையை கொடுக்கிறோம் நமது கொடியையும் உயர்த்திக்கொண்டு விளையாடுகிறோம். மக்கள் எது சொன்னாலும் அதை சொல்லிக் கொண்டே இருக்கட்டும் இங்கே அனைவர் மீதும் விமர்சனங்கள் என்பது உள்ளது சூழ்நிலைக்கு ஏற்றபடி அந்த விமர்சனங்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் இதை நீங்கள் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

தேவையில்லாமல் இதை நீங்கள் காதில் போட்டுக் கொண்டால் உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் அதனால் நீங்கள் அதை கண்டு கொள்ளாமல் போட்டியில் கவனம் செலுத்தி கட்டுப்பாட்டை நிறுத்தி நாட்டுக்காக நன்றாக விளையாடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார் சையத் தீர்மானி

Share it :
Get free tips and resources right in your inbox, along with 10,000+ others
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram