கிரிக்கெட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து இரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது இதில் புதிய பந்துவீச்சாளர்கள் களமிறக்க நிலையில் ரசிகர்கள் சர்ச்சை கருத்து தெரிவித்து வருகின்றன.
இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது இதில் முதல் போட்டியில் விளையாட முடித்த நிலையில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி முதல் போட்டியிலேயே தோல்வியை சந்தித்துள்ளது இதற்கு காரணம் இந்திய அணியின் பந்துவீச்சு தான்.
ஏனெனில் இந்திய அணியில் முதல் போட்டியை பொறுத்தவரை பும்ரா தவிர எந்த பந்துவீச்சாளர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அவரும் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. இது போன்று இந்திய அணியின் பந்துவீச்சு பகுதி மிகவும் மோசமாக இருந்த நிலையில், இரண்டாவது போட்டியில் பும்ரா இடம்பெறவில்லை.
அவருக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், பெரிய டுவிஸ்ட் ஆக அணியில் ஆகாஷ் தீப்பை கொண்டு வந்தது இந்திய அணி. இதனால் ரசிகர்கள் பலரும் சர்ச்சை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றன. அது மட்டும் இல்லாமல் ஏழு நாள் ஓய்வு இருந்தும் பும்ரா ஏன் அணியில் இடம்பெறவில்லை எனவும் கேள்வி எழுப்பி வருகின்றன.