இந்திய அணிக்கு வந்த மிகப்பெரிய சிக்கல்.. முக்கிய இரு வீரர்களுக்கு காயம்!! அவர்களின் நிலை என்ன??

The biggest problem for the Indian team

CRICKET: இந்திய அணியின் முக்கிய இரு வீரர்களுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி இதுவரை விளையாடிய இரு போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. மேலும் இந்திய அணிக்கு இன்னும் நியூசிலாந்து உடனான ஒரு லீக் போட்டி மட்டுமே மீதம் உள்ளது. இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் அணியான பாகிஸ்தான் அணி முதலாவதாக தொடரிலிருந்து வெளியேறியது. நேற்று நடைபெற்று முடிந்த பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டியில் பங்களாதேஷ் தோல்வியை தழுவியதால் அந்த அணியும் தொடரில் இருந்து வெளியேறியது.

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் கடைசி லீக் போட்டியில் வருகிற 2 ம் தேதி மோதவுள்ளது. இந்நிலையில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அதில் இந்திய முக்கிய வீரரான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இருவருக்கும் தசை பிடிப்பு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த இருவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசும் போது அடிக்கடி காலத்திற்கு வெளியே சென்று ஓய்வு எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முகமது ஷமி முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அபார பந்துவீச்சினை வெளிப்படுத்தினார். ஜஸ்ப்ரித் பும்ரா இடத்தை நிரப்பி வந்த நிலையில் தற்போது தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக வந்த தகவல் இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ரோஹித் சர்மா அதிக ரன்கள் எடுக்க வில்லை என்றாலும் ஆரம்பத்தை விறுவிறுப்பாக தொடரும் கேப்டனாக இருந்து வருகிறார். இதனால் அடுத்த போட்டியில் இரு வீரர்களும் கலந்து கொள்வார்களா?? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share it :
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
YouTube
Instagram
Telegram