Dharmapuri: தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சின்ன முறுக்கம்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று நடந்து கொண்டு வருகிறது. இதை ராசிபுரத்தை சேர்ந்த சின்னதுரை என்பவர் பல ஆண்டுகளாக நடத்திக் கொண்டு வருகிறார். இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த நான்கு பெண்கள் வழக்கம் போல வேலை செய்து கொண்டு இருந்தனர். மதியம் 2 மணி அளவில் பயங்கர வெடிச்சிட்டத்துடன் பட்டாசு ஆலை வெடித்து சிதறியது. சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த அனைவரும் சென்று சம்பவ நடந்த இடத்தை மீட்பு பணியை மேற்கொண்டனர்.
இதில் அக்கா தங்கை உட்பட மூன்று பெண்களும் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் மதிய உணவுக்காக பட்டாசு ஆளையே விட்டு வெளியே சென்று உள்ளார். அந்தப் பெண் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஊர் பொதுமக்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். ஒரே குடும்பத்தைச் சார்ந்த அக்கா தங்கை இருவரும் சம்பவத்தில் உயிரிழந்து விட்டனர்.
பட்டாசு ஆலை தீயை கட்டுப்படுத்த தருமபுரி மாவட்ட தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்பு பணியை மேற்கொண்டனர். பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்செய்தியை கேட்ட தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஷ் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். சம்பவம் குறித்து கம்பைநல்லூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இது வெயில் காலம் என்பதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று செய்தி வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.