உத்திரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள கஜி என்னும் கிராமத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. கஜி கிராமத்தில் வசித்து வந்த சர்வஜித் மற்றும் திவாகர் இவர்களுக்கு வயது 22 ஆகும். அவர்களுடைய தாயார் சங்கீதா வயது 49 .அதே கிராமத்தில் வசித்து வரும் சாந்தி தேவி வயது 50 ,தன்னுடைய மகளுடன் திவாகர் எனும் இளைஞர்க்கும் தகாத உறவு உள்ளது என்று சந்தேகத்தில் சாந்தி தேவி தனது இரண்டு மகன்களையும் கூட்டிக்கொண்டு திவாகரின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
சாந்தி தேவியின் மகன் ஷாணி மற்றும் ஸ்ரவன் இவர்களுக்கு வயது 20 ஆகும். நேற்று இரவு திவாகர் குடும்பத்துடன் பயங்கரமான வாக்குவாதத்தில் மூன்று பேரும் ஈடுபட்டுள்ளனர். இதனால் பேச்சுவார்த்தையில் இருந்த சண்டை கைகலப்பு சண்டையாக மாறியது. மேலும் இவர்கள் மூவரும் இரும்பு கம்பியை கொண்டு சங்கீதா மற்றும் திவாகரை பயங்காரமாக தாக்கியுள்ளனர். தாய் மற்றும் மகன் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவலை தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருந்தும் அவர்கள் இருவரும் சிகிச்சையின் போது சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்து விட்டனர். மேலும் அவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த போலீஸ் சூப்பரண்ட் ராஜேஷ் குமார் கொலையாளி மூன்று பேரையும் தீவிரமாக தேடி வந்தார். மூன்று பேரில் ஸ்ரவனை மற்றும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்புடைய குற்றவாளிகளை 4 காவல் தனிப் படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை தீவிரமாக தேடிக் கொண்டு வருகின்றன.மேலும் இந்த வழக்கில் விசாரணையில் இரண்டு போலீஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பேர் இறந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.