மத்திய அரசினுடைய சிலிண்டர் விலை உயர்வு குறித்து தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்களின் மீது உங்களுக்கு கரிசனம் வருமா என சரமாரியாக கேள்விகளை தொடுத்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் எக்ஸ் தள பதிவு :-
அன்றாட வாழ்விற்கே போராடக் கூடிய மக்கள் மீது மத்திய பாஜக அரசாங்க மிகப்பெரிய இடையை இறக்கி இருப்பதாகவும், உங்களுடைய தினசரி வாழ்விற்கே போராடக்கூடிய மக்கள் எப்படி சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும் என்பது போல பல கேள்விகளை கேட்டு இருக்கிறார் விஜய் அவர்கள்.
மேலும், மத்திய பாஜக அரசானது மானிய விலையில் சிலிண்டர் வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில் அந்த வாக்குறுதி அறிவிப்பு அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். காரணம், மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதற்கான மானிய தொகைகள் பயனர்களின் உடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அவற்றை மக்கள் வங்கி கணக்கில் இருந்து எடுத்த செலவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஆனால் இன்று நிலைமை வேறு மாதிரியாக உள்ளது. மானிய விலையில் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது தவிர அந்த மானியம் பயனர்களின் வங்கி கணக்குகளில் போடப்படுவதில்லை என்பதை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் சுட்டிக்காட்டி இருக்கிறார். தேர்தல் நெருங்கக் கூடிய நேரத்தில் விலைவாசியை குறைத்தும் தேர்தல் முடிந்த பிறகு விலைவாசியை உயர்த்தியும் செயல்படுவது பாஜகவின் வேலை ஆகிவிட்டது என்றும் மக்கள் அனைவரும் முட்டாள்கள் அல்ல என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே பொருளாதார அடிப்படையில் பார்க்கும் பொழுது சமையலுக்கு தேவையான பொருட்களின் விலைவாசி உயர்ந்திருக்கிறது என்றும் தற்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டரின் விளையும் இயற்றப்பட்டிருப்பது மக்கள் மீது அதிக அளவு சுமையை திணிப்பது போல் அமைப்பாகவும் குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.