Bangladesh: வங்கதேசத்தின் முகமது யூனுஸ் மற்றும் வங்கதேச ராணுவ தளபதி முகமது உஸ் ஜமான் இடையே கடும் மோதல் நிலவி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
வங்கதேசத்தின் ராணுவ தளபதியான முகமது உஸ் ஜமான் அவசர மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார் தற்போது அதற்கு குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி வருகிறது. இந்தியாவின் அண்டை நாடு தான் வங்கதேசம். வங்கதேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா இருந்தார் அவர் நம் நாட்டுடன் மிகவும் நெருக்கமான இனக்கத்தைக் கொண்டிருந்தார். கடந்த வருடம் அவருக்கு எதிராக வங்கதேசத்தில் போராட்டம் வெடித்தது.
இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். அவர் ராஜினாமா செய்த பிறகு தலைமை ஆலோசகராக இருந்த முகமது யூனுஸ் தற்போதைய இடைக்கால அரசாங்கத்தை செயல்படுத்தி வருகிறார். இவர் தலைமையில் இடைக்கால அரசாங்கம் வந்த பிறகு இவர் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் நமது எதிரி நாடுகளுடன் நட்பு உறவை கொண்டு நம்முடன் மோதல் உறவை தொடர்ந்து வருகிறார். இவர் நாட்டில் அமைதி உருவாக்குவார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் வங்கதேசத்தின் ராணுவ தளபதி முகமது உஸ்மான் சக ராணுவ அதிகாரிகளுடன் அவசர மீட்டிங் ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த மீட்டிங்கில் மக்கள் மத்தியில் இடைக்கால அரசின் மீது நம்பிக்கை குறைவது பற்றி விவாதம் ஏற்பட்டுள்ளது இதனால் எப்படி நாட்டில் நல்ல சூழலை ஏற்படுத்துவது என்பது பற்றியும் அதற்கு ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் வங்கதேசத்தில் இடைக்கால அரசு முகமது யூனுஸ் தலைமையிலான ஆட்சி கவிழ போவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.