தமிழ்நாட்டில் இந்த பல பகுதிகள் இருந்தவரை செய்திகள் எல்லாம் கேட்கும் போது மன உளைச்சலில் மன வேதனையும் தருவதாகவே இருக்கு சட்டம் ஒழுங்குனு இருக்கிறதாவே தெரியல அதுக்கெல்லாம் இந்த கரப்ஷன் கபடதாரிகள் தான் காரணம். இந்த நிலைமை மாறனும் அதுக்கு இருக்குற ஒரே வழி இங்கு உண்மையான மக்களாட்சி மலரனும்னா இவங்கள மாத்தணும்.
அதுக்கு என்ன வழி அதுக்கு நாம என்ன செய்யப் போறோம் நம்மளுடைய தோழர்கள் டெய்லி மக்களை போய் பாருங்க அவங்களோட பேசுங்க ஒவ்வொரு தெருவுக்கும் போங்க ஒவ்வொரு வீட்டுக்கும் போங்க அவங்களோட பிரச்சினைகள் என்னன்னு கேளுங்க அதை தீர்க்கறதுக்கு என்ன வழி யோசிங்க அப்பதான் அவங்களுக்கு நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும் அப்படி ஒரு ஆழமான நம்பிக்கை விதைச்சிட்டு அதுக்கப்புறம் மீண்டும் பாருங்கள் ஒவ்வொரு வீட்டோட உச்சிலையும் தமிழக வெற்றிக்கழகத்தோட ரெட்டைப் போர் யானை வாகை மலர் கொடி தானா பறக்கும்.
மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே உங்க ஆட்சி பத்தி கேள்வி கேட்டா மட்டும் ஏன் சார் உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது நீங்க ஒழுங்கா ஆட்சி நடத்திருந்தீர்கள் என்றால் பெண்கள் பாதுகாப்பு ஒழுங்காக இருந்திருக்கும் சட்டம் ஒழுங்கு சரியா இருந்திருக்கும் பச்சைப்புள்ளைங்க படிக்கிற புள்ளைங்க சின்ன பொண்ணுங்க வீட்ல இருக்குற பொண்ணுங்க வேலைக்கு போற பொண்ணுங்கன்னு இவங்க எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியல சார்.
இதுல வேற உங்க அப்பா அனைவருக்கும் கூப்பிடுகிறார்கள் என்று சொல்றீங்க வேண்டாம், வேண்டாம் உங்களுடைய இந்த கொடுமைகள் அனுபவிச்சிட்டு இருக்குற என்னுடைய சகோதரிகளான தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களுடைய அரசியலுக்கு ஒரு முடிவு கட்ட போறாங்க உங்களுடைய ஆட்சிக்கு ஒரு முடிவு கட்ட போறாங்க உங்களுடைய இந்த அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முடிவு கட்ட போறாங்க