விருதுநகர்: ராமநாதபுரம் பார்த்திபன் ஊரைச் சேர்ந்த காளிதாஸ் சில ஆண்டுக்கு முன்பு சிவகாசியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்தார். அதே பட்டாசு ஆலைக்கு சிவகாசி காமராஜர் காலனி சேர்ந்த மாரீஸ்வரி என்பவர் வேலைக்கு வந்துள்ளார். இவ்விருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதல் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக தான் வாழ்ந்து கொண்டு வந்தனர். பின்னாளில் அவர் செய்த காரியம் தான் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இவ்விருவரும் மதுரை காளவாசல் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் மூன்று மாதங்களுக்கு முன்பு காளிதாசுக்கும் அவருடைய மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
இந்த சண்டையின் காரணமாக மாரீஸ்வரி சிவகாசியில் உள்ள அவர்களின் அம்மா வீட்டிற்கு சென்று உள்ளார். மேலும் அங்கேயே ஒரு பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்தார். மேலும் மனைவியை சமாதானம் பேசி கூட்டிச்செல்ல பார்த்திபன் சிவகாசி வந்துள்ளார். சமாதானம் பேசும் பொழுது இருவருக்கும் இடையே தகராறு பூதாகரமாக வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த காளிதாஸ் தனது மாமியார் வீரமணியை கத்தியால் குத்தி உள்ளார்.
பின்பு பயந்து தப்பித்து ஓடி விட்டார் இதில் படுகாயம் அடைந்த வீரமணி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் மாமியாரை குத்தி விட்டு ஓடிச் சென்ற காளிதாஸ் மதுரை சென்ற பஸ்ஸில் தப்பியுள்ளார் என்று போலீசாருக்கு தெரிய வந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட காவல்துறை பெருங்குடி சுங்கச்சாவடியில் பேருந்தை நிறுத்தி காளிதாசை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. காரணம் இன்றி மாமியாரை ஏன் கொலை செய்தார் என்பதை சிவகாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.